Tuesday, September 12, 2006

001 : விநாயகனே வினை தீர்ப்பவனே!

Photobucket - Video and Image Hosting


ஆற்றங்கரை அமர்ந்த ஆனை முகத்தோனே!
ஐயமேதுமின்றி அருள்வழங்கும் ஐங்கரனே!
வினைகள் தீர்க்கவல்ல வேழமுகத்தோனே - விநாயகனே!
எந்தமிழால் வணங்குகிறேன்! ஆசிதந்து அருளுமைய்யா!
***************************************************************************
பாடல்: விநாயகனே வினை தீர்ப்பவனே
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்

விநாயகனே வினை தீர்ப்பவனே
வேழ முகத்தோனே ஞால முதல்வனே
விநாயகனே வினை தீர்ப்பவனே

குணாநிதியே குருவே சரணம்
குணாநிதியே குருவே சரணம்
குறைகள் களைய இதுவே தருணம்

விநாயகனே வினை தீர்ப்பவனே
வேழ முகத்தோனே ஞால முதல்வனே
விநாயகனே வினை தீர்ப்பவனே

உமாபதியே உலகம் என்றாய்
ஒரு சுற்றினிலே வலமும் வந்தாய்
கணநாதனே மாங்கனியை உண்டாய்
கதிர்வேலனின் கருத்தில் நின்றாய்

விநாயகனே வினை தீர்ப்பவனே
வேழ முகத்தோனே ஞால முதல்வனே


5 comments:

G.Ragavan September 12, 2006 1:32 PM  

ஆனைமுகத்தோன் அருளால் இந்த வலைப்பூ நாள் தோறும் மலர்ந்து தமிழ்மணம் கமழ்ந்திட வேண்டுகிறேன்.

இப்பணியில் அப்பனையும் இணைத்துக் கொண்ட சிபிக்கு நன்றி.

இலவசக்கொத்தனார் September 15, 2006 7:40 AM  

மு.மு.

Thirumozhian September 15, 2006 7:55 AM  

ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்று கின்றனே.

ஞானவெட்டியான் October 01, 2006 10:47 PM  

அன்பு இராகவன்,
இப்பாடலை வலையேற்றியுள்ளேன்.
வேண்டுமெனில் இப்பாடலுக்க்குத் தொடுப்பு கொடுக்கலாம்.
http://iniyavaikal.blogspot.com/2006/10/20.html

யோகன் பாரிஸ்(Johan-Paris) October 05, 2006 2:50 PM  

சிபி!
அருமையான ;மெய்சிலிர்க்கவைக்கும் பாடல்; இதை அந்த நாட்களில் பக்திப் பாடல்கள் எழுதிய உழுந்தூர்ப் பேட்டை சண்முகம் எழுதியிருக்க வேண்டுமென நினைக்கிறேன்.
யோகன் பாரிஸ்

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP