Thursday, October 12, 2006

010. பழநி மலை மீதிலே

முருகன் பாடல் என்றால் கே.பி.சுந்தராம்பாள் பாட்டு இல்லாமலா! இதோ இன்றைய முருகனருளில்!



பழநி மலை மீதிலே
குழந்தை வடிவாகவே
படை வீடு கொண்ட முருகா

பழநி மலை மீதிலே
குழந்தை வடிவாகவே
படை வீடு கொண்ட முருகா

பால்
பழம்
தேனோடு
பஞ்சாமிர்தம் தந்து
பக்தரைக் காக்கும் முருகா
பக்தரைக் காக்கும் முருகா

ஜெயமுண்டு பயமில்லை வேல் வேல்
சக்தி வடிவுண்டு
மயிலுண்டு
கொடியுண்டு வேல் வேல்

வடமிட்டப் பசுந் தங்கத் தேரு
வடமிட்டப் பசுந் தங்கத் தேரு
எங்கும் ஒளி சிந்த இழுக்கின்ற கரம் பல நூறு
இடை தொட்ட கை கொண்ட பிள்ளை
இடை தொட்ட கை கொண்ட பிள்ளை
எங்கள் இயலிசை நாடகத் தமிழுக்கு எல்லை முருகா
இயலிசை நாடகத் தமிழுக்கு எல்லை முருகா
வேல் வேல் சக்தி வேல் வே
வெற்றி வேல் வேல்
ஞான வேல் வேல்
வடி வேல் வேல்

பாடியவர் : கேபி.சுந்தராம்பாள்
இயற்றியவர் : கவியரசர் கண்ணதாசன்
இசை : திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன்
திரைப்படன் : துணைவன்
படம் நன்றி : http://en.wikipedia.org/wiki/K._B._Sundarambal

இந்தப் பாடலைக் கேட்க



அன்புடன்,
கோ.இராகவன்

9 comments:

நாமக்கல் சிபி October 12, 2006 1:34 PM  

பாடல் நன்றாக இருக்கிறது ராகவன்!
நன்றி

VSK October 12, 2006 1:48 PM  

எழுச்சி ஊட்டும் காவடிச் சிந்தில் அமைந்த பாடல்

நல்ல பாடல்!

குமரன் (Kumaran) October 12, 2006 2:07 PM  

மிக அருமையான பாடல் இராகவன். படித்தால் மட்டும் போதாது. அம்மையார் பாடியும் கேட்கவேண்டும். அதே சொற்கள் எவ்வளவு பொருளுடையதாக மாறிவிடுகின்றன அப்போது. அருமை.

கோவி.கண்ணன் [GK] October 13, 2006 12:48 AM  

ஜிரா...!

அமிர்த்தக் குரலில் அருமையான பாடால். கே.பி.எஸ் பாட்டி எப்போதும் அவ்வை பாட்டியை நினைவு படுத்துகிறார்.

G.Ragavan October 13, 2006 3:01 AM  

ஆகா! அனைவரும் பாடலை ரசித்திருக்கின்றீர்கள். கே.பி.எஸ் அம்மையாரின் கணீர் குரலுக்கு மயங்காதார் உண்டோ. முருகனைப் பாடிப் பாடி வாழ்ந்து புகழ் பெற்ற அவரின் பாடல்கள் என்றாலே தமிழர்க்குப் பேரானந்தம். எழுபது வயதிலும் தகதகதகதகவென ஆடவா என்று பிசிறில்லாமல் குறையில்லாமல் பாடிய அவருட பாங்கு முருகன் அருளே என்றால் மிகையாகாது.

பராசரன் October 14, 2006 1:40 AM  

கொடுமுடி கோகிலம் கே பி எஸ் அவர்களின் எல்லா பாட்டுக்களுமே பக்திச்சுவை நிறைந்தவை. அவர்கள் பாடல் மட்டும் இல்லாது அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையும் இன்றைய நடிக/நடிகையருக்கு ஒரு பாடம்.

அவர்கள் பாடிய 'தனித்திருந்து வாழும் கிடைத்தால் ஒலியேற்றுங்களேன். அருமையான பாடல் அது

Machi October 14, 2006 1:33 PM  

நமக்கு ஔவையார்ன்னு சொன்னா அது கே.பி.எஸ் தான், கே.பி.எஸ் ன்னு சொன்னா அது ஔவையார் தான். பிரிச்சி பார்க்க முடியுங்களா?. அவங்க குரலே தனி தான் போங்க.

Kannabiran, Ravi Shankar (KRS) October 14, 2006 10:48 PM  

பாடல், காவடிச் சிந்தில் அருமையோ அருமை! அந்தப் படம்....? அதை விட அருமை. "நளினம்" என்ற சொல் தான் நினைவுக்கு வந்தது!

கௌதமன் September 06, 2010 6:35 AM  

தனித்திருந்து வாழும் மெய் தவமணியே என்ற முருகன் பாடல், கே பி எஸ் அவர்கள் பாடியது எம் பி 3 வடிவம் கிடைக்குமா? வலை ஏற்ற இயலுமா?

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP