Sunday, October 21, 2007

69. மலையாள முருகன்

தமிழ்க்கடவுளுக்குத் தமிழில் நூறு, ஆயிரம், லட்சம், கோடி என்று பாட்டுகள் காட்டலாம். ஆனால் மலையாளத்தில். அதுவும் திரைப்படத்தில்?

இதோ ஒரு பாட்டு. ஸ்ரீ முருகா என்ற மலையாளத் திரைப்படத்தில் இடம் பெற்ற பாட்டு. ஞானப்பழம் நீ அல்லே ஸ்ரீ முருகா என்று இசையரசி பி.சுசீலாவும் மலையாளப் பாடகி மாதுரியும் இணைந்து பாடிய பாடல்.

ஸ்ரீகுமரன் தம்பி எழுதிய இந்த அருமையான பாடலுக்கு இசை தேவராஜன் மாஸ்டர். இவர் அலாவுதினும் அற்புத விளக்கும் என்ற தமிழ்ப் படத்துக்கும் இசையமைத்திருக்கிறார்.

சரி. வாருங்கள். பாடலைக் கேட்போம். மலையாளத்திலும் முருகனைத் தொழுவோம்.



அன்புடன்,
கோ.இராகவன்

(பாடலைத் தேடித் தந்த ராஜேஷ் அவர்களுக்கு நன்றி)

12 comments:

கானா பிரபா October 21, 2007 7:27 AM  

பாடலுக்கு மிக்க நன்றி ராகவன்

மிகவும் அமைதியானதொரு பாடல்.

மலையாளத்தில் இன்னொரு பாடல் உண்டு. நரன் படத்தில் எம்.ஜி.சிறீக்குமார் பாடியது. வேல்முருகா ஹரோகரா என்று துள்ளிசையோடு வரும் பாட்டு.

குமரன் (Kumaran) October 21, 2007 8:07 AM  

இராகவன் நாம் என்ன தான் முருகப்பெருமானைத் தமிழ்க்கடவுள் என்று சொல்லிக் கொண்டாலும் மலையாளிகள் பழனி முருகன் அவர்களுக்குரியவன் என்றே திடமாக நம்புகிறார்கள். இன்றைக்கும் விரதமிருந்து பழனிக்கு வரும் மலையாளிகள் பல்லாயிரம் பேர். அவர்கள் மேலும் அவர்கள் மலையாள நாட்டின் மேலும் காதல் கொண்டே பழனி முருகன் மேற்கு நோக்கி நிற்கிறான் என்று பல கேரளத்தவர் சொல்லியிருக்கிறார்கள். அதனால் குருவாயூரப்பனையும் பகவதியையும் திருச்சூரப்பனையும் அனந்தபத்மநாபனையும் போற்றும் அளவிற்கு முருகனையும் மலையாளிகள் போற்றுவதில் வியப்பில்லை.

குமரன் (Kumaran) October 21, 2007 8:09 AM  

இந்தப் பாடலை ஒன்றிற்கு இருமுறை கேட்டேன். பல மலையாளப் பாடல்கள் போல் இதுவும் மென்மையான இனிமையான ஒரு பாடல். பாடல் அறிமுகத்திற்கு நன்றி இராகவன்.

cheena (சீனா) October 21, 2007 8:12 AM  

கேரளத்தில் முருகன் வழிபாடு என்பது சிறப்பாக நடந்து வருகிறது. பழனி முருகனைத் தரிசிக்க மலையாளிகள் பலரும் வருகிறார்கள்.

cheena (சீனா) October 21, 2007 8:20 AM  

ஞானப் பழம் ..... பாடல் பெல்லிய இசையில் நன்றாக இருக்கிறது

யோகன் பாரிஸ்(Johan-Paris) October 21, 2007 10:31 AM  

இனிய பாடல், யாரும் முருகனை வணங்கலாம்.
முருகனுக்கே உலகம் பூரா கோவில் உண்டு அவர் இனம்,மதம், மொழி கடந்த தெய்வம்...
பழனித் தெய்வம்,குழந்தைத் தெய்வம்
குழந்தையை பிடிக்கதோர் உண்டோ??

Kannabiran, Ravi Shankar (KRS) October 21, 2007 12:58 PM  

//மலையாளிகள் பழனி முருகன் அவர்களுக்குரியவன் என்றே திடமாக நம்புகிறார்கள்//

தாழக்கரை முருகன் ஆலயம் (ஆலப்புழைக்கு அருகில்); கையில் நெல்லும் நெருப்பும் வைத்திருக்கும் முருகன் உருவம். முருகனுக்கென்றே தனியான ஆலயம்!

குமரன் கோவில் என்று பத்மனாபபுரத்தில் இன்னொரு ஆலயம். மணமலை என்று பிரபலம். வள்ளியை இங்கு மணந்ததாக அவர்கள் நம்புகிறார்கள்!

குமார தந்திரம் என்று கேரள வழிபாட்டு முறையே தனியாக உண்டு!

ஜிரா
சுசீலாம்மாவின் குரலில் பாடல் அருமை!
சென்ற பதிவில் ஆங்கிலப் பாடல் இட்டேன். இன்று மலையாளம்!
நாளை தெலுங்கும், கன்னடமும் ஒரு ரவுண்டு வரணும் சொல்லிட்டேன்! :-)
தேடிப் பிடிங்க!

கோவி.கண்ணன் October 21, 2007 11:42 PM  

வடமொழியாளர்களே தமிழ் முருகனை ஸ்கந்தன் என்றும் ஷன்முகன் என்றும் தெய்வயானை மணாளன் ஆக்கி மருமகனாக்கிக் கொண்டு வழிபடுகையில், திராவிட இனமான மலையாளிகள், தமிழுக்கு நெருக்கமானவர்கள் வழிபடுவதில் வியப்பில்லை.

இனிமையான பாடல் !

ஜிராவுக்கு பாராட்டுக்கள் !

தி. ரா. ச.(T.R.C.) October 22, 2007 12:49 PM  

நல்ல பாடலை தேர்ந்தெடுத்தீர்கள் ஜிரா.
முருகன் மொழிக்கும்,எல்லைக்கோடுக்கும்,இனத்திற்கும்,அப்பாற்பட்டவன்.

தி. ரா. ச.(T.R.C.) October 22, 2007 12:50 PM  

அப்பாற்பட்டவன்

SITHAR October 28, 2010 5:42 AM  

ayya

SITHAR October 28, 2010 5:46 AM  

ayya,

Please search the song from the film :"THODIRAGAM'
Song: Thodiyil paadugindren oadi nee varuvai muruga
Singer: Madurai T.N SHESHAGOPALAN
Music: Kunnakudi

1)Kandhar sashti viradham
Song:Kandhar sashti viradham
Singers:Suseela,Dr.Seerkazhi


Both are very super song.Pl upload and remind me on my mail also

Thank you

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP