Saturday, March 22, 2008

ஆனந்த நடனம் ஆடுவதேன்.....






-

ராகம்:- ஹம்ஸாநந்தி தாளம்:- ஆதி
பல்லவி

ஆனந்த நடனம் ஆடுவதேன் மயிலே
அழகன் முருகனை கண்டதனாலோ............( ஆனந்த நடனம்)

அனுபல்லவி

மான்விழியாள் குறவள்ளி மயிலாள்
மடிமீது உனை இருத்தி வருடியதாலோ.........(ஆனந்த நடனம்)

சரணம்

குன்று தோராடிடும் குமர வடிவேலன்
உந்தனின் மீது அமர்ந்ததனாலோ
மீன்விழியாள் குலமங்கை குஞ்சரியாள்
கடைக்கண்அருள் பார்வை கிடைத்ததினாலோ ..ஆனந்த நடனம்)

6 comments:

குமரன் (Kumaran) March 21, 2008 2:54 PM  

தோகை மயில் மீதமர்ந்த சுந்தரனைக் கண்டதோடு தோகை மயிலும் ஆடக் கண்டேன் தி.ரா.ச. நன்றிகள்.

SP.VR. SUBBIAH March 21, 2008 3:00 PM  

அந்தமயில் நின்று ஆடியது முருகனைக்கண்டு
இந்தமனம் இன்று ஆடியது பாடலைக்கேட்டு

Kannabiran, Ravi Shankar (KRS) March 21, 2008 7:57 PM  

ஹம்ஸாநந்தி ராகம் அருமை திராச!
பாடல் மயிலைப் பற்றியது
பாடலின் இராகம் ஹம்சம் (அன்னத்தைப்) பற்றியது!
பொருளும் இசையும் பறவைகளாகவே அமைந்து விட்டது கண்டு அடியேன் மனமும் முருகனிடமே பறக்கிறது!

தி. ரா. ச.(T.R.C.) March 24, 2008 9:57 AM  

@குமரன் வாங்க.இந்தப் பாடல்திருமதி. தரா நடராஜன் என்பவர் எழுதியது. அருமையான இதுபோல் கவிதைகளை அளித்துள்ளார். திரு ஓ.ஸ் அருண் அவர்கள் பாடி இருக்கிறார். ஒவ்வொன்றாக அளிக்கிறேன்

தி. ரா. ச.(T.R.C.) March 24, 2008 9:59 AM  

வணக்கம் சுப்பைய்யா.ம்யில் விருத்தம் மாதிரி இந்தப் பாடல் அமைந்தது

தி. ரா. ச.(T.R.C.) March 24, 2008 10:02 AM  

வாங்க. கேஆர்ஸ். ஹம்ஸத்தோடு நந்தியும் இருக்கிறாரே பார்க்கவில்லையா? ஓ நீங்கள்தான் கண்ணனையும் கந்தனையும் மட்டும்தான் பார்ப்பீர்கள் என்று சொல்ல்கிறார்களே :)P

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP