Sunday, March 29, 2009

மாலைப் பொழுதினிலே ஒரு நாள்


இன்று கிருத்திகை திருநாள். இன்று முருகனை நினைக்கும் நேரத்தில் திரு. கல்கி என்கிற ரா.கிருஷ்ணமுர்த்தி அவர்களின் ஒரு பாடலை பார்ப்போம் கேட்போம்.கல்கி என்றாலே அவர் கதை அதுவும் சரித்திர கதை மட்டும்தான் எழுதுவார் என்று நினைக்கவேண்டாம். கவிதைகளும் சிறப்பாக எழுதுவார்.பாடல் இதோ மலை போல வந்த துன்பத்தை மாதயயை புரிந்து பனிபோல நீக்கியதற்கு நன்றியாக.


ராகம்: செஞ்சுருட்டி

மாலைப் பொழுதினிலே-- ஒருநாள்

மலர் பொழிலினிலே

கோலக் கிளிகளுடன் -குயில்கள்

கொஞ்சிடும் வேளயிலே



மாலை குலவு மார்பன் --மருவில்

மாமதி போல் முகத்தான்

வேலொன்றும் கையிலேந்தி-- என்னையே

விழுங்குவான் போல் விழித்தான்



ராகம்: பெஹாக்


நீலக் கடலினைப் போல் என் நெஞ்சம்

நிமிர்ந்து பொங்கிடவும்

நாலு புறம் நோக்கி-- நாணி நான்

யாரிங்கு வந்த"தென்றேன்.


"ஆலிலை மேல் துயின்று-- புவனம்

அனைத்துமே அளிக்கும்

மாலின் மருமகன் யான் -- என்னையே

வேலன்! முருகன்! என்பார்.



ராகம்: சிந்து பைரவி


சந்திரன் வெள்குறும் உன்முகத்தில்

சஞ்சலம் தோன்றுவதேன்?

தொந்தம் இல்லாதவளோ-- புதிதாய்

தொடர்ந்திடும் உறவோ..?


முந்தைப் பிறவிகளில் உன்னை நான்

முறையினில் மணந்தேன்

எந்தன் உயிரல்லவோ-- கண்மணி

ஏனிந்தஜால"மென்றான்.


ராகம்: மோஹனம்
உள்ளம் உருகிடினும்-- உவகை

ஊற்றுப் பெருகிடினும்

கள்ளத் தனமாக-- கண்களில்

கனல் எழ விழித்தேன்.



புள்ளி மயில் வீரன் -- மோஹனப்

புன்னகைதான் புரிந்தான்

துள்ளி அருகில் வந்தான் -- என் கரம்

மெள்ளத் தொடவும் வந்தான்.


ராகம் : மாயா மாளவ கௌளை


பெண்மதி பேதமையால்-- அவன் கை

பற்றிடுமுன் பெயர்ந்தேன்!

கண் விழித்தெ எழுந்தேந் - துயரக்

கடலிலே விழுந்தேன்



வண்ண மயில் ஏறும் பெருமான்

வஞ்சனை ஏனோ செய்தான்?

கண்கள் உறங்காவோ அக்குறை

கனவைக் கண்டிடேனோ?


திரு. டி. எம். கிருஷ்ணா அவர்களின் குரலில்

-
இதே பாடலை திருமதி எம்.ஸ். அம்மாவின் குரலில் இங்கே கேட்கலாம்">

9 comments:

Kavinaya March 29, 2009 9:54 PM  

ஆகா, என்ன அழகான பாடல். மிக்க நன்றி தி.ரா.ச. ஐயா. கார்த்திகைச் செல்வனுக்கு அரோகரா!

Kannabiran, Ravi Shankar (KRS) March 30, 2009 1:31 AM  

அமரர் கல்கி, நாவலிலும் கதைகளிலும், இடையிடையே எழுதாத கவிதைகளா? பொன்னியின் செல்வனில் - அலை கடலும் ஓய்ந்திருக்க, அகக் கடல் தான் பொங்குவதேன்? - என்பது எவ்வளவு அழகான கவிதை வரிகள்!

நல்ல அழகான ஒரு முருகக் கவியைக் கொடுத்தமைக்கு நன்றி திராச! எம்.எஸ்.அம்மாவின் குரலில் கேட்டேன்! சூப்பர்! :)

மெளலி (மதுரையம்பதி) March 30, 2009 8:04 AM  

நான் அடிக்கடி ஹம் பண்ணும் பாடலில் ஒன்றைக் கொடுத்தமைக்கு நன்றிகள் திராச சார். இது அமரர் கல்கி எழுதியது என்பதை இன்றே அறிந்தேன்...நன்றி.

தி. ரா. ச.(T.R.C.) March 30, 2009 11:04 AM  

அழகான பாடலுக்கு நன்றி கல்கிக்கு கவிநயா. எனக்கும் என் அம்மாவுக்கும் மிகவும் பிடித்த பாடல் அதான் காரணம் போடுவதற்கு.சென்னை விஜயம் முடிந்து விட்டதா?

தி. ரா. ச.(T.R.C.) March 30, 2009 11:21 AM  

@கேஆர்ஸ் வாங்க. வருகைக்கு நன்றி.முருக கவியா? எனக்கு ஏற்கனவே பதுவி உலகத்திலே ஒரு கவி நயா!. வீட்டிலும் ஒரு கவி அண்ணா! என் அண்ணனின் பெயரும் கவிதான். இது மூனாவது கவி?
கல்கி அவரது நாவல்களில் தேவாரம் ஆழ்வார் பாசுரங்களயும் அங்கங்கே சரியான
இடத்தில் புகுத்திவிடுவார். சிவகமியின் சபதத்தில்கூட சிவகாமி ஆடும்போது ஆடலரசனனின் பாடல்தான்

தி. ரா. ச.(T.R.C.) March 30, 2009 11:29 AM  

வாங்க மௌளி சார். தம்பி வந்தவுடன் பின்னாலேயே அண்ணாவும் வந்தாச்சு. திருவண்ணாமலை தொகுதி உடன்பாடு பண்ணிவிட்டு வந்தாச்சா? ஹம் பண்ணவேண்டாம் நல்ல வாயைத்திறந்தே பாடலாம் நல்ல பாட்டு. 50 களில் எல்லார் வீடுகளிலும் அமர்க்களப் பட்ட பாட்டு

Kannabiran, Ravi Shankar (KRS) March 30, 2009 3:27 PM  

//தி. ரா. ச.(T.R.C.) said...
வாங்க மௌளி சார். தம்பி வந்தவுடன் பின்னாலேயே அண்ணாவும் வந்தாச்சு. திருவண்ணாமலை தொகுதி உடன்பாடு பண்ணிவிட்டு வந்தாச்சா?//

ஹா ஹா ஹா!
திருவண்ணாமலை தொகுதி அண்ணனுக்கே!
திருவண்ணாமலை = நினைத்தாலே முக்தி-ங்கிறா மாதிரி, நினைத்தாலே மெளலி! :)

தம்பிக்கு ஒன்னும் தொகுதி இல்லீயா-ன்னு கேட்கக் கூடாது! மொத்த தமிழ் நாடும் தம்பிக்கே! :)

குமரன் (Kumaran) April 02, 2009 2:09 PM  

நானும் ரொம்ப விரும்பிக் கேட்கும் பாடல் தி.ரா.ச. நன்றி.

Radha December 29, 2011 11:19 AM  

எனக்கும் மிகவும் பிடித்த பாடல். :-)

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP