Thursday, December 11, 2008

அருணாசலமும் அருமைமைந்தனும்









இன்று கிருத்திகை திருநாள். இன்றுதான் திருவண்ணாமலையில் தீ வடிவாக இருக்கும் அருணாசல ஈஸ்வரனுக்கு தீபத்திருவிழா.காணக் கண்கோடி வேண்டும். மற்ற தலங்களுக்கு இல்லாத ஒரு பெருமை திருவண்ணாமலைக்கு உண்டு. மற்றதலங்களுக்கு சென்றாலோ அல்லது பிறந்து அல்லது இறந்தாலோதான் முக்தி கிடைக்கும். அருணாசலத்தை நினைத்தாலே போதும் முக்தி நிச்சியம்.ஆதி சங்கரர். திருவண்ணாமலைக்கு வந்தபோது அந்த ஊரையே சிவலிங்கமாகக் கண்டு ஊரில் கால் படாமல் ஊரையும் மலையையும் சுற்றி வணங்கினார் என்ற கூற்றும் உண்டு.சுப்பனை பாடும் வாயால் ஆண்டி அப்பனை பாடுவேனோ என்று இல்லாமல் இரண்டு பேரையும் வணங்குவோம்.

பல்லவி

வேல்முருகா வெற்றி வேல் முருகா
வேறு துணை இங்கு யார் முருகா... (வேல் முருகா...)
அனுபல்லவி
பால்வடியும் உந்தன் வதனத்தை காணவே
பறந்தோடி வந்தேன் மால் மருகா...(வேல் முருகா....)



சரணம்


கோலவிழியாள் குறவஞ்சி ஒருபுறம்
தேவகுஞ்சரி பாங்குடன் மறுபுறம்
நீலமயில்மீது ஏறி நீ வந்திட வேண்டும்
நின் பதமலர்கள் தந்திட வேண்டும் ,...(வேல் முருகா...)


இனி அப்பனைப் பார்ப்போமா

சிவனைப் பற்றிய பாடலை தமிழ்த் தியாகைய்யாவான பாபநாசம் சிவனின் கீர்த்தனையை இதே தேதியில் நம்மை விட்டு மறைந்த பாரத ரத்னா திருமதி எம் எஸ் அம்மாவின் குரலில் திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் கோவிலில் பாடிய பாரத் பர பரமேஸ்வரா என்ற வாசாஸ்பதி ராகப் பாடலை பார்த்து கேட்டு ரசிப்போமா.


4 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) December 11, 2008 11:40 AM  

அண்ணாமலைக்கு அரோஹரா!
எங்க அருணைகிரி முருகனுக்கு அரஹரோஹரா!

//இதே தேதியில் நம்மை விட்டு மறைந்த பாரத ரத்னா திருமதி எம் எஸ் அம்மாவின் குரலில் திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் கோவிலில் பாடிய பாரத் பர பரமேஸ்வரா//

எம்.எஸ்.அம்மாவுக்கு நினைவஞ்சலி!
பொருத்தமான நேரத்தில் கொடுத்த பாட்டு! நன்றி திராச!

ambi December 11, 2008 11:52 PM  

ஆறு வருடங்களுக்கு முன் மஹா தீபத்துக்கு திருவண்ணாமலை போகும் பாக்யம் கிடைத்தது. மீண்டும் பழைய நினைவுகள். :)

அருமையான பாடலுக்கு நன்னி. ராகம், தாளம் என்ன?னு போன் பண்ணினா தான் சொல்வீங்களா சார்? :p


//சுப்பனை பாடும் வாயால் ஆண்டி அப்பனை பாடுவேனோ என்று இல்லாமல் இரண்டு பேரையும் வணங்குவோம்.
//

TRC sir touch. :)))

மெளலி (மதுரையம்பதி) December 12, 2008 6:10 AM  

அருமையான பாடல்கள்...நன்றி திரச சார்....

குமரன் (Kumaran) December 12, 2008 10:11 AM  

அனைவருக்கும் தீபத்திருநாள் வாழ்த்துகள்.

தீபமங்கள ஜோதி நமோ நம:

திருவண்ணாமலை தீபத்தைத் தரிசித்து மகிழ்ந்தேன். மிக்க நன்றி தி.ரா.ச. ஐயா.

அப்பனையும் சுப்பனையும் வணங்கினோம்.

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP