Monday, August 23, 2010

அந்தோணி முத்து! என் ஆவி குடியிருக்கும் ஆவினன்குடி!

இந்த நாளில், முருகனருளில் ஒரு அஞ்சலி!
ஊனங்கள் பல இருந்தும், வானங்கள் தொட முடியும் என்பதற்கும்...
எவ்வளவு தோண்டினாலும், தன்னம்பிக்கை சுரக்கச் சுரக்க, சுரக்கும் என்பதற்கும்...
என் கண் முன்னே எடுத்துக்காட்டாய் நின்றவர்...
அந்தோணி முத்து அண்ணா!

இளம் வயதில், அவர் மறைந்த செய்தி, என்னை மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது!


இப்பத் தான், நானும் மதுமிதா அக்காவும், சென்னை புழலேரியில், இவர் வீட்டிற்குச் சென்று பார்த்தாப் போல இருக்கு! இளையாராஜா இசையில் உச்சி வகிடு எடுத்து-ன்னு பாடக் கேட்டாப் போல இருக்கு!

காலன்றி, மேல்கொண்டு, தவழ்ந்து தவழ்ந்தே அவர் எங்களை உபசரித்த விதம்...
இல்லத்துக்கு வருவோரை முகத்தாலேயே எப்படி மனங்குளிர வரவேற்கலாம் என்பதை நண்பர்களை விட இவரிடத்தில் தான் தெரிந்து கொண்டேன்!

என்னவொரு முனைப்பு, தன்னார்வம், சுய சம்பாத்தியம், பொது முனைப்பு!
தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்! - இந்தக் குறளுக்கு உரை = அந்தோணிமுத்துவின் வாழ்வு!

இதோ, அந்தோணி அண்ணன் பற்றிய இசை இன்பப் பதிவு!
அவருக்குப் பிடிச்ச சிவரஞ்சனி பாட்டு பத்தி அவரே எழுதின பதிவு இங்கே!

ஊரெல்லாம் ஓரோர் பேர் சொல்லி என்னை அழைக்க...நீங்கள் மட்டும் "விஷ்ணு" என்று எதற்கு அழைத்தீரோ? அறியேன்!
ஆனால் இதோ உங்கள் "விஷ்ணுவின்" துதிகள்! - பிதாவே, இவர் மனத்தை சொஸ்தம் பண்ணி ஆற்றும்! இணையடி நீழலில் ஆற்றும்!

என் முருகா.....அந்தோணிமுத்து அண்ணாவின் ஆவி குடி இருக்க...ஆவி-நன்-குடி அருள்வாய் தானே?
Father, into thy hands I commit my spirit!" - Luke 23:46
Mr. Antonimuthu passed away on August 23, 2010 at 10.00 a.m. due to stomach tumor and wheezing in Chennai.
Funeral Mass offered at 11.00 a.m. on August 23, 2010, at Peria Nayagi Chapel in his native village, Peria Nayagi Nagar, Villupuram District 605702.



ஆவி குடி இருக்க - ஆவினன் குடி! இதுவே இந்த வார முருகனருள் பாடல்! சீர்மிகு சீர்காழியின் குரலில்...இதோ


ஆவி குடியிருக்கும் ஆவினன்குடி - அங்கே
கொலுவிருக்கும் அழகுத் திருவடி
(என் ஆவி குடியிருக்கும்)

பாவங்களைப் போக்கும் பால் காவடி
தேன் பஞ்சாமிருதம் இனிக்கும் குகன் சேவடி
(என் ஆவி குடியிருக்கும்)

சேவல் எழுந்தாடும் வெற்றிக்கொடி
சேந்தன் திருப்பாதம் பற்றிப்பிடி
வேல் வந்து வரவேற்கும் வா இப்படி
கேளாய் நீ நெஞ்சே என் சொல் படி
(என் ஆவி குடியிருக்கும்)

நீல மயில் ஆடும் கோயில் படி
நித்த நித்தம் காணும் நிலை எப்படி
காலம் எல்லாம் நினைந்து கண்ணீர் வடி
வாழ்வு தரும் முருகன் வண்ணப்பொற் கழலடி
(என் ஆவி குடியிருக்கும்)

6 comments:

துளசி கோபால் August 25, 2010 1:28 AM  

பெருமாள் அவரை சட்னு கூப்புட்டுக்கிட்டான்:(

SurveySan August 25, 2010 2:02 AM  

:(

Anonymous August 25, 2010 6:02 AM  

ரொம்ப கஷ்டப்பட்டார் . ஆன்மா சாந்தியடைய ப்ரார்த்திக்கிறேன்.

குமரன் (Kumaran) August 27, 2010 9:58 AM  

திரு. அந்தோணிமுத்துவின் உயிர் நன்னிலை எய்தட்டும்!

மிக நல்ல பாடல் அவர் நினைவிற்கு!

தருமி August 28, 2010 12:53 AM  

பதிவு மனசைக் கரைக்குது ...

Jayashree September 03, 2010 5:19 AM  

படித்ததும் என் நினைவுக்கு வந்தது

"A happy life consists not in the absence, but in the mastery of hardships "- Helen Keller

அதுக்கு உதாரணமாக என்று.

I am sorry for your loss

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP