Tuesday, November 30, 2010

வேலய்யா வடிவேலய்யா எங்கள் வேலய்யா

இசையில் கிடைக்காத இன்பம் எது?
நமக்கு பிடிச்ச இசையில் நம்ம கந்தனை பாடக் கேக்கும் சுகம் இருக்கே!

இசை போல் இன்பத்தைத் தருபவன்
கண்டவரெல்லாம் இச்சை கொண்டேங்கும்
அந்த பழனி மலை ஆண்டவனை
இந்தப் பாடலைக் கேட்போம் வாருங்கள்

-------------------------------------------------------

வேலய்யா வடிவேலய்யா
எங்கள் வேலய்யா
வேலய்யா வடிவேலய்யா
உன்னைத் தினமும் போற்றிடும்
என்னைப் பாரய்யா
ஓங்கு புகழ் கொண்ட தெய்வமே
பழனி ஆண்டவா!
குன்றுகள் தோறும்
கோயில் கொண்ட எங்கள் குமரய்யா

கோல மயில் மீதமர்ந்த சண்முக நாதா
கூறும் ஆறு படை வீட்டின் முருகன் நீயய்யா!
ஆலம் உண்ட சிவன் மகனே அழகு தெய்வமே முருகா
அகிலம் போற்றும் வள்ளி மணாளா முருகா
அன்பு கொண்டு அருள் புரிவாய் நீ முருகா
அன்பு கொண்டு அருள் புரிவாய் நீ

வேலய்யா வடிவேலய்யா
எங்கள் வேலய்யா
வேலய்யா வடிவேலய்யா
உன்னைத் தினமும் போற்றிடும்
என்னைப் பாரய்யா
ஓங்கு புகழ் கொண்ட தெய்வமே
பழனி ஆண்டவா!
குன்றுகள் தோறும்
கோயில் கொண்ட எங்கள் குமரய்யா

உன்னை எந்தன் கண்குளிரக் காணும்போதிலே
என் உள்ளத்திலே ஆனந்தம் பொங்குதே
அன்னை போல காப்பவன் என்று பாடும்
பேசுவதும் உன்னையல்லவா
நான் உன்னருளே வேண்டுகின்றேன்
முருகா உன்னருளே வேண்டுகின்றேன்
முருகா உன்னருளே வேண்டுகின்றேன்

வேலய்யா வடிவேலய்யா
எங்கள் வேலய்யா
வேலய்யா வடிவேலய்யா
உன்னைத் தினமும் போற்றிடும்
என்னைப் பாரய்யா
ஓங்கு புகழ் கொண்ட தெய்வமே
பழனி ஆண்டவா!
குன்றுகள் தோறும்
கோயில் கொண்ட எங்கள் குமரய்யா

வேலய்யா வடிவேலய்யா
எங்கள் வேலய்யா
வேலய்யா வடிவேலய்யா

9 comments:

குமரன் (Kumaran) November 30, 2010 6:39 AM  

நல்ல பாடலின் அறிமுகத்திற்கு நன்றி அருணையடிகளே!

நாமக்கல் சிபி November 30, 2010 6:48 AM  

இதென்னது ஒருமை பன்மையா மாறுது! :))
நான் எழுத முயற்சிக்கிற வெண்பாக்களில் வேணும்னா அடிகள் வரலாம்!

Kannabiran, Ravi Shankar (KRS) November 30, 2010 10:22 AM  

//அருணையடி said...
இதென்னது ஒருமை பன்மையா மாறுது! :))//

அருணையடிகளே
என் முருகனை எழுத, ஒரு மை, பன் மையாக மாறாதோ? பலப்பல மையாக மாறி எழுதாதோ? :)

Kannabiran, Ravi Shankar (KRS) November 30, 2010 10:32 AM  

ஒரு முகனுக்கு ஒரு-மை!
அறு முகனுக்கு பன்-மை!
அதுவே அடியவர் பெரு-மை!

அறு முகனை ஒரு முகமாக, உள்ளத்திலோர் சித்திரமாய்
எழுதி எழுதிப் பார்த்திருக்க...
ஒரு மை, பன் மையாகி,
பன்மையால் மனமும் ஒருமையாகும்!

:)

Kannabiran, Ravi Shankar (KRS) November 30, 2010 10:53 AM  

நெஞ்சத் துணியில் முருகோ வியத்தை
அஞ்சன மைகொண்டு அடியேன் தீட்ட
செஞ்சொற் தமிழ்மை ஒருமை அதுவும்
கொஞ்சிக் கொஞ்சிப் பன்மை ஆகும்!

பன்மை அவனுள் ஒருமை ஆகி-என்
மென்மை அவனுள் தன்மை ஆகி-என்
பெண்மை அவனுள் உண்மை ஆகி-என்
நன்மை அவனுள் பன்மை ஆகும்!

முருகா முருகா முருகா எனவே
உருகா உருகா உருகிடு நெஞ்சம்
பருகா பருகா பருகிடு எந்தை
மருகா முருகா முன்வரு வாயே!

R. Gopi November 30, 2010 11:37 AM  

super

நாமக்கல் சிபி November 30, 2010 1:29 PM  

கே.ஆர்.எஸ் அருமை!

/அருணையடிகளே
என் முருகனை எழுத, ஒரு மை, பன் மையாக மாறாதோ? பலப்பல மையாக மாறி எழுதாதோ? :)
/

சிலேடைப் புலவனய்யா நீர்

Kavinaya November 30, 2010 10:53 PM  

பாடல் நன்று;
கண்ணனின் சொல்லாடல் மிக நன்று :)

//நெஞ்சத் துணியில் முருகோ வியத்தை
அஞ்சன மைகொண்டு அடியேன் தீட்ட
செஞ்சொற் தமிழ்மை ஒருமை அதுவும்
கொஞ்சிக் கொஞ்சிப் பன்மை ஆகும்!//

இது ரொம்பப் பிடிச்சது.

sury siva December 05, 2010 4:55 AM  

வேலனுக்கு அரோஹரா !!

வேல் வேல் ! வெற்றி வேல் !!

சுப்பு ரத்தினம்.

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP