Thursday, July 28, 2011

சேவற்கொடியோன்!


முருகன்அவன் நாமம் சொல்லிப் பாடுவோம் – மனம்
உருகஉருக கந்தன் பாதம் நாடுவோம்!
நீலமயில் மீதில் அவன் ஏறுவான் – நம்
உளம்மகிழ நொடியில் முன்னே தோன்றுவான்!

ஆடிஅவன் வரும் அழகைப் பார்க்கணும் - நாம்
கூடிநின்று அவன் புகழைப் பாடணும்!
தேவியர்கள் இருவருடன் அருளுவான் - நமைத்
தாயெனவே காப்பதிலே மகிழுவான்!

வேலைக் கண்டால் வேதனைகள் ஓடுமே – ஒரு
சோலை போல வாழ்க்கையெல்லாம் ஆகுமே!
நாவற் பழம் தந்தவனை நாடுவோம் – அந்த
சேவற் கொடியோனின் பதம் சேருவோம்!

--கவிநயா

பிகு. படத்தைப் பெரிதுபடுத்தி(க்ளிக்கி)ப் பார்க்கத் தவறாதீர்கள்!

16 comments:

sury siva July 29, 2011 12:30 AM  

வேதனைகள் தீர வேலவனைப் பாடுங்கள்.
சரி தான் !!
நெஞ்சையுருக்கும் பாடல் இது.
பாகேஸ்வரி தான் சரியாக ராகமாக இருக்கலாம்.
பாடலாமா ?

சுப்பு தாத்தா
http://kandhanaithuthi.blogspot.com

Kavinaya July 29, 2011 1:42 PM  

வாங்க சுப்பு தாத்தா. நீங்க இப்படி ஒரு கேள்வி கேட்கலாமா? இப்பல்லாம் உங்களைத்தான் பார்க்க முடியறதில்லை :( அவசியம் பாடுங்கள். கேட்க அவனுடன் நாங்களும் ஆவலுடன் காத்திருக்கோம்!

குமரன் (Kumaran) July 29, 2011 2:00 PM  

இரவி இன்னும் இந்தப் பாட்டைப் படிக்கலையா? பாத்தா கொடியோன் இந்த சேவற்கொடியோன்னு பாடுவார்! :-)

Kannabiran, Ravi Shankar (KRS) July 29, 2011 2:15 PM  

சூப்பரு! நல்லா இருக்கு-க்கா! ரொம்ப தான் திமிரு! என்ன டீக்கா உடுப்பு உடுத்திக்கிட்டு நிக்குறான்!:)
எல்லாத்த விட பிடிச்சது, இந்தப் புகைப்படத்தில் நானும் இருக்கேன்!:)

பெருசாக்கிப் பாருங்க! நிற்கும் முருகன் போட்டிருக்கும் ஓம் டாலருக்குள் அதே போலவே நிக்கும் ஒரு குட்டி முருகன்! அதான் நானு:)

Kannabiran, Ravi Shankar (KRS) July 29, 2011 2:16 PM  

//வேலைக் கண்டால் வேதனைகள் ஓடுமே – ஒரு
சோலை போல வாழ்க்கையெல்லாம் ஆகுமே!//

உம்.....பாட்டுல நல்லாத் தான் இருக்கு முருகா

Kannabiran, Ravi Shankar (KRS) July 29, 2011 2:19 PM  

//சேவற் கொடியோனின் பதம் சேருவோம்!//

சிலைவேடச் சேவல்....கொடியோனே! ரொம்பக் கொடியவன்! வாட்டி எடுக்குவான்! அவனுக்கு ஆளாகி விட்டோம்-ன்னு தெரிஞ்ச பிறகு ரொம்பத் தான் பிகு-வா நடத்துவான்! முனுக் முனுக் கோவம் வேற...அத கெஞ்சிக் கொஞ்சிப் போக்கறதுக்குள்ள உசிரு போகும்....

கொடியோனே!
கொடியோனே!
அவனுக்கே என்னை விதி என்ற இம்மாற்றம் நாங்கடவா வண்ணமே நல்கு!

குமரன் (Kumaran) July 29, 2011 2:25 PM  

இம்புட்டு நகையும் பூமாலைகளும் போட்டுக்கிட்டு ரொம்ப வேர்க்கும். பாவம்.

குமரன் (Kumaran) July 29, 2011 2:27 PM  

பாருங்க...சொன்ன மாதிரி வந்து வைகைப்புயல் மாதிரியே பொலம்புறாரு. சாரி. கொஞ்சுறாரு. :-)

Kavinaya July 29, 2011 2:31 PM  

//பாருங்க...சொன்ன மாதிரி வந்து வைகைப்புயல் மாதிரியே பொலம்புறாரு. சாரி. கொஞ்சுறாரு. :-)//

குமரனுக்கு தெரியாமல் இருந்தாதான் ஆச்சர்யம் :)

Kavinaya July 29, 2011 10:34 PM  

//பெருசாக்கிப் பாருங்க! நிற்கும் முருகன் போட்டிருக்கும் ஓம் டாலருக்குள் அதே போலவே நிக்கும் ஒரு குட்டி முருகன்! அதான் நானு:)//

அது சரி :)

//உம்.....பாட்டுல நல்லாத் தான் இருக்கு முருகா//

:) என் நினைப்பு போலவே இருக்கு. இது சம்பந்தமா இப்பதான் ஒரு அம்மா பாட்டு எழுதினேன், அது உங்களுக்கு பிடிச்சாலும் பிடிக்கலாம். செவ்வாய்க்கிழமை பாருங்க... :)

Kavinaya July 29, 2011 10:35 PM  

//இம்புட்டு நகையும் பூமாலைகளும் போட்டுக்கிட்டு ரொம்ப வேர்க்கும். பாவம்.//

அவன் நம்மை சோதிக்கிற மாதிரி நாமும் அவனைச் சோதிக்க வேண்டாமோ? :)

Lalitha Mittal July 30, 2011 9:14 AM  

paattu [subbusir'ssinging]is nice!
wting fr tuesday 'ammaa song'!

Kavinaya July 30, 2011 3:44 PM  

பாடலைக் கேட்டு மகிழ்ந்தேன் தாத்தா! மிக்க நன்றி.

Kavinaya July 30, 2011 3:44 PM  

வாங்க லலிதாம்மா.

//wting fr tuesday 'ammaa song'!//

:) நன்றிம்மா.

திகழ் July 31, 2011 1:31 AM  

/வேலைக் கண்டால் வேதனைகள் ஓடுமே – ஒரு
சோலை போல வாழ்க்கையெல்லாம் ஆகுமே!
நாவற் பழம் தந்தவனை நாடுவோம் – அந்த
சேவற் கொடியோனின் பதம் சேருவோம்!/

இரசித்தேன்

Kavinaya July 31, 2011 12:23 PM  

//இரசித்தேன்//

மகிழ்ச்சி திகழ் :) நன்றி.

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP