Tuesday, August 13, 2013

தமிழிசை பாடுகின்ற வானம்பாடி!

இன்றைய பாடல் = கணீர்ப் பாடல்!
இன்றைய குரல் = கணீர்க் குரல்!


தமிழிசை = சங்கத் தமிழ்க் காலத்தில் இருந்து வாழ்ந்து வருவது
*கலித் தொகை = கலியென (வல்லோசை) பெற்று வருவது = Rock
*பரி பாடல் = பரிந்து வருவது = Melody

சிலப்பதிகாரம் = பெரும் தமிழிசைக் காப்பியம்!
தூக்கு, வண்ணம் -ன்னு இசைக் கூறுகளின் புதையல்-ன்னே சொல்லலாம்!

*பின்பு வந்த ஆழ்வார்களின் பாசுரம் = பா + சுரம் -ன்னு பாவிலேயே சுரம் அமைந்து விடும்!
*நாயன்மார்களின் தேவாரத் திருமுறைகள் = பண் ஆராய்ச்சிக்குப் பெரும் புதையல்!

அப்படியே, அருணகிரியின் சந்தக் கவிகள் என்று வளர்ந்து...
பின்னாளில், தமிழிசை மூவர் என்றே உருவெடுத்தது!
*அருணாசலக் கவிராயர்
*முத்துத் தாண்டவர்
*மாரிமுத்தாப் பிள்ளை

எப்படி கர்நாடக இசை மூவருக்கும் பிறந்த இடம் = திருவாரூர்...
அதே போல், தமிழிசை மூவருக்கும் பிறந்த இடம் = சீர்காழி!

இன்றைய பாடலும் சீர்காழியே! இங்கே கேட்டுக் கொண்டே படியுங்கள்


தமிழிசை பாடுகின்ற வானம்பாடி - என்
தலைவன் முருகனைத் தினம் தேடி - நான்
(தமிழிசை பாடுகின்ற)

அமிழ்தினும் இனிதான தமிழ்ப்பாட்டு - அந்த
ஆறுமுகம் மயங்கும் அதைக்கேட்டு - செந்
(தமிழிசை பாடுகின்ற)

திருப்புகழில் மணக்கும் தமிழிசையே - தேன்
திருவாசகம் தன்னில் தமிழிசையே!
திருஅருட் பாவெல்லாம் தமிழிசையே - தமிழ்த்
தெய்வத்தை வசமாக்கும் தமிழிசையே!
(தமிழிசை பாடுகின்ற)

பூம்பாவைக்கு உயிரைத் தந்த இசை - பொங்கும்
புனலினையே எதிர்த்து வந்த இசை!
பாம்பு தன் நஞ்செடுக்க வைத்த இசை - என்றும்
பரவசம் ஊட்டுகின்ற இன்ப இசை!
(தமிழிசை பாடுகின்ற)

ராகம்: சிவரஞ்சனி
குரல்: சீர்காழி கோவிந்தராஜன்
வரிகள்: ?



இந்தப் பாடல், கர்நாடக ராகம்: சிவரஞ்சனியில் அமைந்துள்ளது!
தமிழிசையில் அமையாவிட்டாலும்... தமிழிசையைப் போற்றுகிறது!

பலப்பல தமிழ்ப் பண்கள்:  
* நட்டபாடை, கொல்லி கெளவணம்,
* குறிஞ்சி,  சீகாமரம்,
* இந்தளம், புறநீர்மை
* தக்கேசி, செவ்வழி

(குரல்/ துத்தம் - கைக்கிளை/ உழை - இளி/ விளரி - தாரம்/ குரல்)
குது - கைஉ - இவி - தாகு
= சரி - கம - பத - நிச

கர்நாடகத்தில் = ராகம் என்றால்.... தமிழில் பண்!
அதே போல்..
* ஸ்வரம் = பதம்
* தாளம் = தாளம்
* ஆரோஹணம் = ஆரோசை
* அவரோஹணம் = அமரோசை

-ன்னு கர்நாடக இசைச் சொற்களும், அதற்கு ஈடான தமிழிசைச் சொற்களும்!

தமிழ்க் கடவுள் = முருகனை, 
தமிழ்க் கடவுள் = திருமாலை, 
தமிழ்க் கடவுள் = கொற்றவையை....
தமிழ் இசையால் துதிப்போம்!!

0 comments:

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP