Tuesday, November 05, 2013

பழனி என்னும் ஊரிலே...

நண்பர் ஒருவரின் மடிக்கணினியில் இருந்து நிறைய பாடல்களை என்னுடைய பென் டிரைவிற்குச் சில வாரங்களுக்கு முன் மாற்றிக்கொண்டு வந்தேன்.
நேற்று இந்தப் பாடலைக் கேட்கும் வாய்ப்பு கிட்டியது. கையில் இருந்த வேலையை அப்படியே வைத்துவிட்டு முழுதும் கேட்டபிறகு வேலையைத் தொடர்ந்தேன்.
சூலமங்கலம் சகோதரிகளின் குரலில் ஒரு அருமையான மெலடி.

பழனி என்னும் ஊரிலே
பழனி என்ற பேரிலே
பவனி வந்தான் தேரிலே
பலனும் தந்தான் நேரிலே - முருகன் 
பலனும் தந்தான் நேரிலே

பழமுதிரும் சோலையிலே
பால்காவடி ஆடி வர

தணிகைமலைத் தென்றலிலே
பன்னீர்க் காவடி ஆடிவர

சாமிமலைக் கோயிலிலே
சக்கரைக் காவடி ஆடிவர

செந்தூரின் வாசலிலே
சந்தனக் காவடி ஆடிவர

குமரன் 
பழனி என்னும் ஊரிலே
பழனி என்ற பேரிலே

பரங்குன்றில் மலையோரம்
சேவற்கொடி ஆடிவர

குன்றக்குடியில் எந்நாளும்
வண்ணமயிலும் ஆடிவர

மயிலத்தின் மலைமேலே
மணியோசை முழங்கிவர

விராலிமலை மேலிருந்து
வீரவேலும் வெற்றிபெற

கந்தன் 
பழனி என்னும் ஊரிலே
பழனி என்ற பேரிலே
பவனி வந்தான் தேரிலே
பலனும் தந்தான் நேரிலே - முருகன் 
பலனும் தந்தான் நேரிலே

அறுபடை வீடுகளும் ஒரே பாடலில் வருகின்றன. மேலும் குன்றக்குடி, மயிலம், விராலிமலைத் தலங்களும்.

பாடல் குறித்து மேலதிகத் தகவல்கள் நான் தேடியவரை இணையத்தில் கிடைக்கவில்லை. யாரேனும் தெரிந்தவர்கள் பகிர்ந்துகொண்டால் தன்யனாவேன்.



4 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) November 06, 2013 2:19 PM  

மிக்க நன்றி கோபி!

முன்பெல்லாம் கந்த சட்டி ஆறு நாட்களும் ஆறு பதிவுகள் தொடர்ந்து இடுவது வழக்கம்!
2007, 08, 09, 10, 2011 -ன்னு ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து வந்தது... இப்போது நின்று விட்டது:((

இன்று பார்த்தேன்... உங்கள் பதிவு!
என்ன சொல்வதென்றே தெரியலை..
"பலனும் தந்தான் நேரிலே"

இனிய பாடல்..
கம்பீரமான சூலமங்கலம், Melody போல் பாடும் பாடல்

பழனி என்னும் ஊரிலே
பழனி என்ற பேரிலே
-ன்னு முதல் வரிகளே அழகு!

பவனி வந்தான் தேரிலே
முருகன் பலனும் தந்தான் நேரிலே!

Kannabiran, Ravi Shankar (KRS) November 06, 2013 2:25 PM  

அறுபடை வீடுகளும் ஒரே பாட்டில் வருவது:

1. அறுபடை வீடு கொண்ட திருமுருகா - கந்தன் கருணை
2. எழுதி எழுதிப் பழகி வந்தேன் - குமாஸ்தாவின் மகள்

இவை சினிமாப் பாடல்கள்!
சொந்தப் பாடல் - காவடிச் சிந்து: 100ஆம் பதிவாய் வருவாய் குகனே!
http://muruganarul.blogspot.com/2008/07/100-kavadi-chindhu.html

Kannabiran, Ravi Shankar (KRS) November 06, 2013 10:14 PM  

//பாடல் குறித்து மேலதிகத் தகவல்கள் நான் தேடியவரை இணையத்தில் கிடைக்கவில்லை. யாரேனும் தெரிந்தவர்கள் பகிர்ந்துகொண்டால் தன்யனாவேன்//

oops, sorry gopi, missed your last line, as i was just enjoying the lyrics of the song

This is from an album of soolamangalam sisters (திருநீறில் மருந்து இருக்கு)
Music by Kunnakudi

அழகெல்லாம் முருகனே
கந்தன் கருணை முகங்கள் ஓராறு
முருகா உன் சிரிப்பு
பழனி எனும் ஊரிலே
திருநீறில் மருந்திருக்கு தெரியுமா?
-ன்னு சில பல பாடல்களின் தொகுப்பு இந்த ஆல்பம்!

உங்க pen driveஇல் இதர பாடல்கள் இருக்கா?-ன்னும் பாருங்கள்! முடிஞ்சா வலையேற்றுங்கள்.. Dank u!


R. Gopi November 07, 2013 1:52 PM  

@KRS, நன்றி. பென் டிரைவில் தேடிப்பார்க்கிறேன்

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP