Monday, July 27, 2015

பச்சை மயிலோடு பழகுபவன்!

 

பச்சை மயிலோடு பழகும் வடிவேலவனே
இச்சை கொண்டழைத்தேன் அருகே வருவாய் குகனே!
(பச்சை)

நச்சுப் பாம்பணிந்த பிச்சாண்டியின் மகனே
பட்சம் கொண்டெந்தன் பக்கம் வா குகனே
அச்சம் தவிர்த்தெனக்கு அபயம் தந்திடுவாய்
சிட்சித் தருளிடவே சீக்கிரம் வந்திடுவாய்!
(பச்சை)

மெச்சி உனைப் பாட முத்தமிழ் தந்திடுவாய்
கெச்சை ஒலித்திடவே இக்கணம் வந்திடுவாய்
பிச்சி உமையாளின் பேறு பெற்ற திருமகனே
உச்சி முகர்ந்துன்னை அணைத்திட வருவாய் குகனே!
(பச்சை)


--கவிநயா 

 

4 comments:

கே. பி. ஜனா... July 28, 2015 2:49 AM  

அருமையான பக்திப்பாடல்..

திண்டுக்கல் தனபாலன் July 28, 2015 3:23 AM  

அருமை...

Kavinaya July 28, 2015 8:46 PM  

மிக்க நன்றி, ஜனா, மற்றும் தனபாலன்!

Nanjil Siva January 02, 2020 8:46 AM  

கவிநயா பெயருக்கேற்ப நயமாக உள்ளது உங்கள் கவி.ஜட்ஜ்மென்ட் இங்கு கிளிக்.

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP